Tuesday, 4 September 2018

சர்கார் திரைப்படத்திலும் இது இல்லையாம்..! ஏமாற்றத்தில் ரசிகர்கள்


A.R. முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் சர்கார் திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார். தீபாவளிக்கு வெளிவர தயாராகி வரும் இந்த திரைப்படத்தின் பாடல்களும் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த 'சர்கார் திரைப்படத்தில் விஜய் தனது குரலில் மீண்டும் பாடுவாரா..?' என்ற கேள்விக்கு ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் பதில் கிடைத்துள்ளது.

சமீபத்திய தகவலின் படி A.R. ரஹ்மான் இசையில் உருவாகி இருக்கும் சர்கார் திரைப்பட பாடல்களில் விஜயின் குரலில் எவையும் உருவாகவில்லை என்றும், கிட்டத்தட்ட இசை வெளியீடும் நெருங்கி விட்டதால் இந்த திரைப்படத்திலும் விஜய் பாட வாய்ப்பில்லை எனவும் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.   



  
Disqus Comments
'