Breaking News

சர்கார் கொண்டாட்டத்தின் முதல் அறிவிப்பு..! வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம்


A.R. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் சர்கார். அரசியல் அதிரடி திரைப்படமாக உருவாகி இருக்கும் சர்காரின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்தது.

தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதன் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் 'செப்டம்பர் 19 முதல் சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம்' என அறிவித்து ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் வைத்தது.

அதன்படியே இன்று காலை 11மணிக்கு சர்கார் திரைப்படத்திலிருந்து சிங்கிள் டிராக் வருகிற செப்டெம்பர் 24ம் தேதி வெளியாகும் என்ற தகவலை வெளியிட்டது அந்நிறுவனம்.

A.R ரஹ்மான் இசையில் சர்கார் திரைப்பட பாடல்கள் உருவாகியுள்ள நிலையில், இந்த அறிவிப்பானது இசை பிரியர்களையும், விஜய் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இதோடு மட்டும் நின்று விடாமல் மேலும் பல சர்கார் திரைப்பட அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவர உள்ள நிலையில், சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தபடியே வருகிற நாட்கள் அனைத்தும் விஜய் ரசிகர்களுக்கு சர்க்கார் கொண்டாட்டம் தான்.