Saturday, 15 September 2018

அந்த மாதிரி ஆளுங்கள காலுலயே சுடனும்... சமந்தா ஆவேசம்


தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம்வருபவர் நடிகை சமந்தா. திருமணத்திற்கு பின்னும் மார்கெட்டில் சக்கை போடு போடும் சமந்தாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான, நடிகையர் திலகம், இரும்புத்திரை, யூடர்ன் என அனைத்துமே மெகா ஹிட்.

மேலும் தற்பொழுது நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்துள்ள அவர், சமூக வலைதளங்களில் கேலி செய்பவர்கள் குறித்து ஆக்ரோசமாக பேசி இருக்கிறார்.

அப்படி கேலி செய்பவர்கள் தைரியம் இருந்தால் உங்கள் நிஜ போட்டோ மற்றும் தகவல்களை கொடுத்து விட்டு பிறரை கேலி செய்யுங்கள். இவர்களை போன்றவர்கள் கையில் கிடைத்தால் 'ஓட விட்டு காலில் சுடுவேன்' எனவும் பேசி சமூக வளைதல விமர்சகர்களை பீதியில் ஆழ்த்தி இருக்கிறார்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();