Breaking News

ரஜினிகாந்தை சோகத்தில் ஆழ்த்திய இரங்கல் செய்தி


நடிகர் ரஜினிகாந்த் தற்பொழுது கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் பிசியாக நடித்து வருகிறார். அடுத்தடுத்து படங்கள் நடிக்கும் எண்ணத்திலும் அவர் இருக்கும் நிலையில், அவரது குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது உறவினர் ஒருவரது மரணம்.

ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணன் அவர்களது மனைவி கலாவதி என்பவர் உடல் நல குறைவு காரணமாக, கடந்த செப்டம்பர் 2ம் தேதி தனது 72வது வயதில் மரணம் அடைந்தார்.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டிருந்த நிலையில், திரைதுறையினரும், ரசிகர்களும்  நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்திற்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.