Breaking News

மனிதனுக்கும் ரத்த காட்டேரிக்கும் காதலா...? இளசுகளை கவர்ந்த வெப் சீரிஸ்


இந்த இணைய யுகத்தில் திரைத்துறையும் வேறு கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன் முதற்கட்டமாக மேற்கத்திய நாடுகளைப் போல நம் தமிழ்நாட்டிலும் வெப்சீரிஸ் எனப்படும் இணைய தொடர்கள் அதிக அளவில் வெளிவர துவங்கியுள்ளன.

அந்த வெப்சீரிஸ்களில் இளைஞர்களிடையே மிகப் பிரபலமாகிக் கொண்டிருக்கும் ஒன்று தான் 'நிலா நிலா ஓடி வா'. ரொமான்ஸ் காமெடி த்ரில்லர் வகையில் உருவாகி இருக்கும் இந்த தொடரின் வெற்றிக்கு, ரத்த காட்டேரியான நாயகிக்கும் சாதாரண மனிதனான நாயகனுக்கும் இடையேயான காதலும் அவர்களை சுற்றி நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளும் காரணமாக அமைந்துள்ளது.

கல்லூரியில் தீவிரமாக காதலித்து திடீரென காணாமல் போன ஒரு பெண், எதிர்பாராத விதத்தில் ரத்தக்காட்டேரியாக மீண்டும் நாயகன் வாழ்வில் வருவதும், இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் இருவரும் காதலில் விழுவதும், ரத்த காட்டேரிகளால் பாதிக்கப்பட்டு அந்த இனத்தை மொத்தமாக அளிக்க துடிக்கும் கும்பலிடம் இருந்து நாயகியை காப்பாற்ற நாயகன் போராடுவதும் என விறுவிறுப்பாக நகர்கிறது இந்த தொடர்.


இறுதியில் நாயகியை மீண்டும் மனிதனாக பழைய நிலைக்கு நாயகன் எப்படி மாற்றுகிறார் என்பதுதான் இந்த தொடரின் கிளைமாக்ஸ். மொத்தம் 13 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் வியு (VIU) எனும் இலவச செயலில் ஒளிபரப்பாகி வருகிறது.

J.S. நந்தினி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடரில், மங்காத்தா திரைப்பட புகழ் அஸ்வின் நாயகனாகவும், சுனைனா நாயகியாகவும் கலக்கி இருக்கின்றனர்.