Breaking News

நாயகனை படாதபாடு படுத்திய உதட்டு முத்த காட்சி... அடேங்கப்பா இத்தனை டேக்கா...?


நடிப்பில் அசத்திவிடும் இளம் நாயகர்கள் பெரும்பாலானோர் , நாயகிகளுடனான நெருக்கமான காட்சிகள் என்றால் நடுங்கி போய்விடும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தேறிவருகின்றன.

இவ்வகையில் மெட்ரோ திரைப்பட புகழ் நடிகர் ஸ்ரிஸ் முத்த காட்சியில் சொதப்பிய தகவலை வெளியிட்டுள்ளனர் ராஜா ரங்குஸ்கி படக்குழுவினர்.

தரனிதரன் இயக்கத்தில் மெட்ரோ ஸ்ரிஸ், சாந்தினி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ராஜா ரங்குஸ்கி. வருகிற செப்டம்பர் 21ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

அதில் பேசிய நாயகி சாந்தினி, 'நடிகர் ஸ்ரிஸ் ஒரே ஒரு காட்சியில் மட்டும் 19 டேக் வாங்கினார், பிற காட்சிகளில் ஒரே டேக்கில் ஓகே வாங்கி அசத்திவிட்டார்' என புகழ்ந்து பேசி இருந்தார்.

19 டேக் வாங்கும் அளவிற்கு அப்படி என்ன காட்சி என பத்திரிக்கையாளர்கள் மேலும் விசாரிக்க, பின்பு தான் அது ஒரு லிப் லாக் காட்சி என்பதும், நாயகி முதல் டேக்கிலேயே ஒகே வாங்கி விட்டாலும், நாயகன் சங்கோஜத்தில் கன்னாபின்னாவென சொதப்பி இருந்ததும் தெரியவந்தது.

தொடர்புடைய செய்திகள்

பிரபலங்களின் முகத்திரையை கிழிக்க 'ஸ்ரீ ரெட்டி'யின் புதிய அவதாரம்