Breaking News

"தல மாமா கூட பைக்ல போகணும்" வைரல் பேபி ஸ்மித்திகாவின் ஆசை


'திட்டாம அடிக்காம குணமா வாய்ல சொல்லணும்' என்ற வசனத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஓவர் நைட்டில் சிரிக்க வைத்தவர் பேபி ஸ்மித்திகா. உணவு சரியாக உண்ணமால் அடம்பிடித்த அவரை, அவரது தாயார் அடிக்க, பதிலுக்கு அவர் பேசிய காட்சிகள் பதிவு செய்யப்பட அவரது பெற்றோரே எதிர்பாராத விதத்தில் செம வைரல் ஆனார் ஸ்மித்திகா.

தற்பொழுது அவர் ஒரு ஆன்லைன் செலிப்ரிட்டி ஆகிவிட்ட நிலையில், செய்தி ஊடங்களும், டிவி சேனல்களும் போட்டி போட்டு அவரை பேட்டி எடுக்க ஆரம்பித்திருக்கின்றன.

அப்படி சமீபத்தில் அவர் கலந்து கொண்ட தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில், உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேள்வி கேட்கப்பட, "தல மாமா" என மழலை மொழியில் பதிலளித்தார்.

தொடர்ந்து, "தல மாமாவை நேரில் பார்த்தல் என்ன சொல்லுவீங்க?" என்று கேட்கப்பட, "தல மாமா நீங்கனா எனக்கு ரொம்ப பிடிக்கும், நீங்க என்ன பைக்ல கூட்டிட்டு போங்க" என்று சொல்லி அனைவரையும் 'சோ கியூட்' என வியக்க வைத்தார்.