Breaking News

'அஜித்' மாமாவ பாக்கணும்..! 'குணமா' சொன்ன வைரல் பேபியின் ஆசை


#குணமா சொல்லணும்

நடிகர் அஜித்திற்கு லட்சக்கணக்கான இளம் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோரைப் போல அஜித்திற்கு குழந்தை ரசிகர்கள் குறைவு தான். இப்படி ஒரு புள்ளி விவரம் தமிழ் சினிமா துறையில் இருக்க  தனக்கு நடிகர் அஜித்தை தான் பிடிக்கும் எனக்கூறி தனித்து நிற்கிறார் வைரல் பேபி ஸ்மித்திகா. 

'அடிக்காம திட்டாம வாயில குணமா சொல்லணும்' என தன் தாயிடம் குணமா பேசி வைரல் ஆனவர் தான் இந்த ஸ்மித்திகா. திருப்பூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பிரகாஸ், பிரவீனா தம்பதியின் மகளான இவர் யூகேஜி படித்து வருகிறார்.

சரியாக உண்ண மறுத்த காரணத்தினால் தாய் கண்டித்து லேசாக அவரை அடிக்கவே, ஸ்மிதிக்கா அவ்வாறு பேசி இருந்தாராம். இப்படி ஒரே வீடியோவில் தமிழகம் முழுவதும் பிரபலமான ஸ்மித்திகா ஒரு அஜித் ரசிகையாம்.

பிரபல செய்தி நிறுவனம் ஒன்று இது குறித்து கேள்வி எழுப்பி இருந்த நிலையில், 'எனக்கு தல மாமாவை ரொம்ப பிடிக்கும், அவரை நேர்ல பாக்கணும்னு ஆசை' என தனக்கே உரிய அந்த மழலை மொழியில் பதில் அளித்திருந்தார்.