Breaking News

திரைப்படமாகிறது குமரிக்கண்டத்தின் வரலாறு... தமிழர்களின் பெருமை பறைசாற்றப்படுமா..?


குமரிக் கண்டம், இந்திய பெருங்கடலில் இந்தியாவின் தெற்கே ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, நாடுகளுக்கு இடையே இருந்தாகவும் பேரழிவு ஒன்றின் பின்னர் கடலுக்கடியில் மூழ்கி விட்டதாகவும் தமிழர்களால் நம்பப்படும் ஒரு மர்ம கண்டமாகும்.

குமரி கண்டம் குறித்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை என்றாலும், தொல்காப்பியம் போன்ற இலக்கியங்களில் இது குறித்து குறிப்பிடப்பட்டிருப்பது தமிழர்கள் பற்றிய சுவாரஸ்ய உண்மைகளை உள்ளடக்கிய ஒன்றாக குமரிக் கண்டம் இருக்கும் என பலரது ஆர்வத்தையும் தூண்டியது .

இந்நிலையில் குமரிக்கண்டத்தினை கதை கருவாக கொண்டு, திரைப்படம் ஒன்று உருவாக இருக்கிறது.  ஏ.எல்.விஜயின் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தில் நாயகனாக நடிகர் தனுசை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படம் குறித்து சமீபத்தில் பேசி இருந்த விஜய் அவர்கள், கடந்த 2013ம் ஆண்டு முதலே குமரிக்கண்டம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாவும், 2014ம் ஆண்டே அதன் கதையை எழுதி முடித்து விட்டதாகவும், சரியான தருணம் மற்றும் தயாரிப்பு நிறுவனம் எதிர்நோக்கி காத்திருந்ததே இந்த தாமதத்திற்கு காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.


அனைத்தும் எதிர்பார்த்த படி செல்லும் பட்சத்தில் அடுத்த ஆண்டு குமரிக்கண்டம் திரைப்பட படப்பிடிப்பு துவங்கும் எனவும், 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகும் என்றும் அவர் பேசி இருந்தார்.