Breaking News

தமிழகத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் 'TRP' கிங் விஜய் தானாம்..! வியக்க வைக்கும் புள்ளி விவரங்கள்


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்க்கு கேரளாவிலும் எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். இதனால் அம்மொழி சேனல்களிலும் நடிகர் விஜயின் படங்கள் அவ்வப்போது ஒளிபரப்பட்டு வருகின்றன.

அத்தகைய திரைப்படங்கள், கேரள சினிமா நட்சத்திரங்களின் படங்களை விட அதிக கேரள மக்களால் பார்க்கப்படும், அதிசயிக்கத்தக்க புள்ளி விவரங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது.

சமீபத்தில் 'தி பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரீசெர்ச் கௌன்சில்' கேரள டிவி சேனல்களில் முதல் 5, TRP ரேட்டிங் பெற்ற திரைப்படங்களின் பெயர்களை வெளியிட்டிருந்தது.

அந்த பட்டியலில் நடிகர் விஜயின் மெர்சல், தெறி ஆகிய திரைப்படங்கள் முதல் இரண்டு இடங்களையும், 2 கண்ட்ரிஸ், பாகுபலி-2, புதிய முகம் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்து இருந்தன.

இதன்மூலம் தமிழக தியேட்டர்கள், டிவி சேனல்களில் மட்டுமல்லாது கேரளாவிலும் TRP கிங் தான்தான் என நிரூபித்து காட்டி இருக்கிறார் நடிகர் விஜய்.

தொடர்புடைய செய்திகள்

தனது ரசிகர் கூட்டத்தால் ஏற்பட்ட சங்கடம்..! விஜய் செய்த நெகிழ்ச்சியான காரியம்