Breaking News

நில வழக்கில் தீர்ப்பு சொல்ல உதவிய 'காலா' திரைப்படம் - உயர்நீதி மன்றத்தில் சுவாரஸ்யம்


ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் ரஜினி நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் காலா. மும்பை வாழ் தமிழர்களுக்கு ஏற்படும் இட பிரச்சனையை மையப்படுத்தி வெளிவந்திருந்த இந்த திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது.

இந்நிலையில் உயர்நீதி மன்றத்தில் தொடுக்கபட்ட நிலம் சம்பந்தமான வழக்கில் தீர்ப்பு சொல்ல உதவி இருக்கிறது இந்த காலா திரைப்படம்.

 காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தொடுத்திருந்த அந்த வழக்கில், தன்னை போன்று சொந்த நிலம் இல்லாமல் தவிக்கும் மக்களின் பிரச்சனையை புரிந்து கொள்ள காலா திரைப்படத்தை பார்க்குமாறு நீதிபதி அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

நீதிபதியும் அவரது கோரிக்கையை ஏற்று அந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு நியாயத்தின் பக்கம் தீர்ப்பு கூறி இருக்கிறார். இப்படி ஒரு வழக்கின் தீர்ப்பில் திரைப்படம் உதவிய சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.