Breaking News

ரசிகர்களுக்கு நடிகர் 'ஜெய்' கொடுத்த திடீர் சர்ப்ரைஸ்


இதுவரை நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நடிகர் ஜெய் முதன் முறையாக பாடகராக அறிமுகமாகி இருக்கிறார்.

A.N பிச்சுமணி இயக்கத்தில் ஜெய், ரெபா மோனிக்கா, பிக்பாஸ் டேனியல் ஆகியோர் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் ஜருகண்டி. இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு ஒன்றினை வெளியிடப்போவதாக தனது ரசிகர்களுக்கு சமீபத்தில் சஸ்பென்ஸ் ஒன்றினை வைத்திருந்தார் ஜெய்.

தொடர்ந்து தான் முதன் முறையாக பாடகராகி இருக்கும் தகவலையும் வெளியிட்டு தனது ரசிகர்களை குஷி படுத்தி இருந்தார். இந்நிலையில் அவரது குரலில் உருவாகி இருக்கும் 'செய்யிறத செஞ்சி முடி' எனும் பாடல் இன்று வெளியாகியுள்ளது.

போபோ ஷாஷி இசையில், கங்கை அமரன் அவர்களது வரிகளில் ஜெய் பாடி இருக்கும் இந்த பாடலானது, ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.