Breaking News

ஒரே பாடலில் பெற்ற பிரபலம் ஒரே பாடலில் காலி - பிரியா பிரகாஸுக்கு வந்த சோதனை


ஓமர் லுலு இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஒரு ஆதார் லவ்' திரைப்பட பாடலின் வீடியோ மூலம் கண்ணடித்து ஒட்டுமொத்த இந்தியாவையும் கவர்ந்தவர் ப்ரியா பிரகாஸ் வாரியர். அவருக்கு கிடைத்த இந்த திடீர் பிரபலம், முன்னனி பாலிவுட் நடிகைகளையும் தாண்டி சமூக வலைதளங்களில் அவரை ஜொலிக்க செய்தது.


இப்படி ஒரே பாடலில் ஓஹோவென உயர்ந்த பிரியாவிற்கு, தற்சமயம் வெளியாகியுள்ள 'ஃப்ரீக் பெண்ணே' எனும் பாடல் வினையாக அமைந்து இருக்கிறது. ஒரு ஆதார் லவ் படத்தினை சேர்ந்த இப்பாடல், ராப் இசை பாணியில் உருவாகி ஒலிப்பெருக்கிகளை அதிர செய்யும் அளவிற்கு அருமையாக உருவாகி உள்ளது.

என்றாலும் ப்ரியா பிரகாஸ் மீது சமீபத்தில் ரசிகர்களுக்கு உருவான வெறுப்பு, டிஷ்லைக்குகளாகவும், ட்ரோல்களாகவும் இப்பாடலில் எதிரொலித்து உள்ளது.

நேற்று இரவு யூட்யூபில் வெளியான இப்பாடல், 10 மணி நேரதிற்குள் சுமார் பத்து லட்சம் பார்வையாளர்களை பெற்று டிரென்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது. அதே சமயம் இந்த வீடியோவிற்கு சுமார் இரண்டு லட்சத்துக்கு அதிகமான டிஷ்லைக்குகளும் குவிந்துள்ளது.