Sunday, 16 September 2018

வாவ் செம சார்...! படக்குழுவினரை பாராட்ட வைத்த தனுஸ்


நடிகர் தனுஸ் ஆரம்பகட்டத்தில் தன் மீது வைக்கபட்ட விமர்சனங்களை எல்லாம் தகர்த்தெறிந்து இன்று ஹாலிவுட்டில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார். இதற்கு அவரது கடின உழைப்பும் ஒரு முக்கிய காரணம்.

இத்தகைய பிரமாண்ட வளர்ச்சிக்கு பிறகும், ஒரு கதாப்பாத்திரமாக மாற மெனக்கெடும் அவரது முயற்சிகள் படக்குழுவினரை வியக்க வைத்து வருகிறது.

இவரது நடிப்பில் உருவாகி என்னை நோக்கி பாயும் தோட்டா, மாரி-2 ஆகிய படங்களோடு வடசென்னை திரைப்படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது

ஏற்கனவே மாரி படங்களில் ஒரு ரௌடியாக கதாப்பாத்திரம் ஏற்று நடித்திருந்தாலும், வடசென்னை திரைப்படத்தின் ரௌடி கதாப்பதிரதிற்கு நிறையவே ஹோம் வொர்க் செய்திருந்தாராம் தனுஸ்.

அந்த திரைப்படத்தில் வட சென்னை பகுதியை சேர்ந்த ஒரு கதாப்பாத்திரம் எனும் பட்சத்தில், அப்பகுதி இளைஞர்கள் உபயோகிக்கும் வார்த்தைகள், பாடி லாங்குவேஜ் என தேடி தேடி சேகரித்து பயிற்சி செய்து நடித்து, படக்குழுவினரை வாவ் சொல்ல வைத்திருக்கிறார்.     


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();