Breaking News

சிம்பு படம் என்றாலே பிரச்சனைதானா..? சிக்கியது 'செக்க சிவந்த வானம்'


'தமிழ் சினிமாவிலேயே அதிக வதந்திகள், பிரச்சனைகளில் சிக்கியது என்றால் அது சிம்பு தான்' என இந்த தலைமுறை சினிமா ரசிகர்கள் கூட தயங்காமல் சொல்வார்கள். அந்த அளவிற்கு பிரச்சனைகளின் மறு உருவமாக இருந்த சிம்பு, இப்பொழுது நம்ப முடியாத அளவிற்கு முற்றிலும் மாறிவிட்டார்.

படப்பிடிப்புக்கு முதல் ஆளாக சென்று விடுவது, சொன்னபடி திரைப்படங்களை முடித்து கொடுப்பது என பலரையும் வியப்பில் ஆழ்த்தி வந்தாலும் அவரது படங்கள் பிரச்சனைகளில் சிக்குவது மட்டும் ஒழிந்த பாடில்லை.

மணிரத்னம் அவர்களது இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா என ஒரு மாபெரும் நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் திரைப்படம் செக்க சிவந்த வானம்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் கூட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வருகிற செப்டம்பர் 28ம் தேதி இத்திரைப்படம் ரிலீசாக இருந்த நிலையில், விலங்குகள் நல வாரிய பிரச்சனையில் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் அறிவித்த தேதியில் இந்த திரைப்படம் ரிலீசாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.