Breaking News

இன்னொரு அவென்ஜர் வந்தாச்சு..! அதிரடி காட்டும் கேப்டன் மார்வெல் ட்ரைலர்


ஹாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான மார்வெல் ஸ்டூடியோஸ், அதன் சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு பெயர் போனது. அயர்ன் மேன், ஸ்பைடர் மேன், கேப்டன் அமேரிக்கா, தோர், ஹல்க், அன்ட் மேன் என இவர்களின் சூப்பர் ஹீரோ கதாப்பதிரங்களும் இவர்கள் இணைந்து அதிரடி காட்டிய அவென்ஜெர்ஸ் திரைப்பட தொடரும் உலக பிரபலம்.

அதன் ஒரு மூன்றாவது பகுதியான 'அவென்ஜெர்ஸ் இன்பினிட்டி வார்'  சமீபத்தில் வெளியாகி உலகளாவிய வசூலில் சக்கை போடு போட்டது. மேலும் அந்த பகுதியில் வில்லன் தானோசை கட்டுப் படுத்த முடியாமல் தவிக்கும் அவெஞ்சர்சுக்கு உதவ, நிக் பியூரி கதாப்பாத்திரம் ஒரு புதிய சூப்பர் ஹீரோவை அலைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.


அதில் இருந்த குறியீடை வைத்து அடுத்த பாகத்தில் வர இருப்பது, கேப்டன் மாரவெல் என்பதனை அப்பொழுதே கண்டுபிடித்துவிட்டனர் மார்வெல் காமிக்ஸ் ரசிகர்கள்.

தற்பொழுது அதனை உறுதி படுத்தும் விதத்தில், கேப்டன் மார்வெல் யார் எப்படி உருவானார் என்பதனை விளக்கும், 'கேப்டன் மார்வெல்' திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது மார்வெல் நிறுவனம்.

அன்னா போடன், ரையேன் ஃபிளேக் இணைந்து இயக்கி இருக்கும் இந்த திரைப்படமானது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக இருக்கிறது.