Breaking News

பிக்பாஸ் ரைசாவுக்கு அடித்த ஜாக்பாட்


நடிகர் விக்ரம் மகன் துருவ் அறிமுகமாக இருக்கும் திரைப்படம் வர்மா. தெலுங்கில் வெளிவந்து சக்கை போடுபோட்ட 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் ரீமேக்காக இது உருவாகி வருகிறது.

ஆரம்பத்தில் வர்மா திரைப்படத்தின் நாயகியாக, நடிகை கௌதமியின் மகள் சுப்புலட்சுமி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாக அதற்கு கௌதமி மறுப்பு தெரிவித்திருந்தார்.

பின்னர் அப்படத்தின் நாயகி யார் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில், தற்பொழுது அந்த திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் ரைசா நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்காத நிலையில், இந்த வர்மா திரைப்பட வாய்ப்பு அவருக்கு நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது.