Breaking News

நேர்மையாக பணம் சம்பாதிக்கும் ஒரே நடிகர் அஜித் - அன்புமணி ராமதாஸ் பேச்சு


திரைத்துறையில் நடிகர் அஜித் திரைப்படங்களிலும் நிஜ வாழ்விலும் ஹீரோவாக இருந்து மக்கள் மனதை வென்றவர். சிறு சிறு உதவியாளர்கள் முதல், இயக்குனர்கள் வரை அனைவருடனும் சமமாக பழகுவதும், உதவி என்று கேட்பவர்களுக்கு மறுக்காமல் உதவி செய்வதும் என அஜித்தின் நடவடிக்கைகள் அவர் மீதான மரியாதையை பல மடங்கு உயர செய்தது.

இந்நிலையில் திரைத்துறையில் வழக்கமான விஷயமான வரி ஏய்ப்பு, கருப்பு பணம் போன்ற சட்ட விரோத செய்கைகளில் ஈடுபடாத ஒரே நடிகர் என்ற பெயரையும் பிரபல அரசியல் வாதியான அன்புமணி ராமதாஸ் அவர்களின் வாயால் கிடைக்கப் பெற்றிருக்கிறார் அஜித்.

சமீபத்தில் வரி ஏய்ப்பு குறித்து மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்த ராமதாஸ், "தமிழ் நாட்டில் எந்த ஒரு நடிகரும் நேர்மையான முறையில் சம்பாதிக்கவில்லை. ஒரே ஒருவர் அஜித்தை தவிர" என்றிருந்தார்.

இவர் மட்டுமல்லாது நடிகர் சிவகார்த்திகேயனும் 'அஜித் எனக்கு நிறைய நல்ல விசயங்களை சொல்லி கொடுத்திருக்கிறார். அதில் ஒன்றுதான் ஒழுங்காக வரி கட்டுவது' என அஜித்தின் நேர்மை குறித்து பேசி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.