Breaking News

'அமலாபால்' துவங்கிய சைடு பிசினஸ்....! பயன்பெற போகும் பெண்கள்


திருமணத்திற்கு பிறகு நாயகிகள் சினிமாவில் ஜொலிக்க முடியாது என்ற ஒரு நடைமுறையை மாற்றி காட்டிய நாயகிகளில் அமலாபாலும் ஒருவரும். திருமணம், விவாகரத்து என தனது வாழ்வில் மிகப்பெரும் சூறாவளியையே கடந்து விட்ட அவர் தொடர்ந்து நல்ல கதாப்பதிரங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் அதோ அந்த பறவை போல, ஆடை, ராட்சசன் போன்ற திரைப்படங்கள் வரிசையாக களம்கான இருக்கும் நிலையில், புதிய தொழில் ஒன்றினை துவங்க இருக்கிறார் அமலாபால்.

 தனது உடலை கட்டுக் கோப்பாக வைத்துக்கொள்ள ஆயூர்வேதத்தையும், யோகாவையும் பெரிதும் நம்பி இருக்கும் இவர், தன்னை போல பிற பெண்களும் ஆயூர்வேதத்தால் பயன்பெறும் வகையில் ஊட்டச்சத்து பொருள் தயாரிக்கும் நிறுவனத்தை விரைவில் துவங்க இருக்கிறார்.

இதற்கான இறுதி கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த நிறுவனத்தில் பெரும்பாலும் பெண்களை வேலைக்கு நியமிக்கவும் திட்டமிட்டுள்ளார்.