Breaking News

அது ஏன்னு தெரில எல்லாருக்கும் அவரை பிடிக்குது..! அஜித்தை புகழும் சமந்தா

ajith-is-my-husbands-favorite-samantha

தமிழ் சினிமாவில் எக்கச்சக்க ரசிகர்ககளை கொண்ட நடிகர்களில் அஜித்தும் ஒருவர். நடிப்பு தாண்டி நிஜ வாழ்விலும் ஹீரோவாக இருந்து வரும் அவர்தான் பல இளைஞர்களுக்கு இன்று ரோல் மாடல்.

இப்படி இருக்க சினிமா துறைக்கு உள்ளேயும் வெளியேயும் அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர். பல நடிகர் நடிகைகள் தங்களுக்கு அஜித் தான் பிடிக்கும் என கூறிவரும் நிலையில், இப்படி அனைவரையும் தன் வசப்படுத்தும் அஜித் குறித்து வியந்து பாராட்டி இருக்கிறார் நடிகை சமந்தா.

சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், அஜித் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "அது என்னமோ தெரியவில்லை சினிமா துறையில் இருப்பவர்கள், இல்லாதவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அவரை பிடிக்கிறது.

ஏன் தமிழ் சினிமா பற்றி பெரிதும் தெரியாத எனது கணவருக்கும் அவர் தான் பேவரைட். தமிழில் அவருக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் அஜித் சார் என்றுதான் கூறுவார்" என பேசி வியந்து இருந்தார்.

தல போல வருமா...!!!!!