Breaking News

அஜித் பற்றிய வதந்தியால் கூடிய ரசிகர்கள் - ஸ்தம்பித்த நெடுஞ்சாலை


விஜய், அஜித், ரஜினி போன்ற ரசிகர்களுக்கு தமிழகத்தில் எக்கச்சக்க ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்ததே. இவர்களின் படப்பிடிப்பில் கூடும் ரசிகர்களால் அந்த இடமே கூட்ட நெரிசலால் ஸ்தம்பித்த காட்சிகளையும் நாம் கண்டிருப்போம்.

இது போன்ற ஒரு சம்பவம் தற்பொழுது அஜித் ரசிகர்களால் நடைபெற்று இருக்கிறது. நடிகர் அஜித் தற்பொழுது விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் வேலூர் பகுதி வழியாக வருவதாக வதந்தி ஒன்று அப்பகுதி ரசிகர்களிடையே பரவியது. இதனால் அஜித்தை நேரில் பார்க்கும் ஆர்வத்தில் வேலூர் நெடுஞ்சாலையின் டோல் கேட்டில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூட்டமாக திரண்டு விட்டனர். இதனால் அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

என்றாலும் நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள், அஜித் வராத காரணத்தால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.