Breaking News

சரித்திரம் படைக்க தயாராகும் தல அஜித்தின் 'தக்ஸா' குழு - ஆரம்பமே அமர்க்களம்


சினிமா துறையை தாண்டி, பலவேறு திறமைகளை கொண்டவர் தல அஜித். இதனை அவர் பல முறை நிரூபித்து காட்டி இருந்த நிலையில், அண்ணா பல்கலை கழகத்தில் ஏரோநாட்டிக்கல் பிரிவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தார்.

அவரது ஆலோசனையின் கீழ் செயல்பட்டு வரும் 'தக்ஸா' எனும் குழு உருவாக்கிய ஆளில்லா விமானம் அதிக நேரம் பறந்து இந்திய அளவில் சாதனையும் படைத்தது.

இதனை தொடர்ந்து உலக அளவில் நடைபெறும் போட்டியிலும் கலந்து கொள்ள இருக்கும் இந்த குழு, மருத்துவ துறையில் பெரும் பங்களிப்பை வழங்கும் விதத்தில், மருத்துவ உபகரணங்களை சுமந்து செல்லும் டிரோன் விமானத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருந்தது.

இந்நிலையில் இந்த முயற்சியின் முதற்கட்டமாக நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் உருவாக்கிய விமானம், தரையிறங்காமல் சுமார் 60 கிலோ மீட்டர் பறந்து அசத்தி இருக்கிறது. இதனால் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் போட்டியிலும் 'தக்ஸா' குழு பட்டையை கிளப்பும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.