Breaking News

"இப்போ புரிஞ்சி போச்சி" ஒரே ட்வீட்டில் ரஜினியை கலாய்த்த கஸ்தூரி..!


சமூக வலைதளங்களில் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து எப்பொழுதும் ட்ரெண்டில் இருக்கிறார் நடிகை கஸ்தூரி. தமிழகத்தில் எந்த பிரச்சனை சென்றாலும் தவறாது கருத்து தெரிவித்து விடும் இவர், சோபியா விவகாரத்தில் ரஜினியின் மௌனம் குறித்து, கிண்டலாக பதிவு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு, மத்திய அரசான பாஜக'வை விமர்சித்து சிறை சென்ற சோபியா குறித்து ரஜினியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

அதற்கு ரஜினி தனது கருத்தை தெரிவிக்காமல் மௌனம் காத்தார். இந்நிலையில் அவரது பேட்ட படத்தின் முதற்பார்வை போஸ்டர் நேற்று வெளியாகி இருந்தது.

இந்த இரண்டு சம்பவங்களையும் தொடர்பு படுத்தி நடிகை கஸ்தூரி, 'இப்போ புரிஞ்சு போச்சி பட ரிலீஸ் வரைக்கும் நோ கமண்ட்ஸ்' என ரஜினியை கிண்டல் செய்யும் விதத்தில் பதிவிட்டு இருந்தார்.


அதாவது தூத்துக்குடி விவகாரத்தில், காலா பட ரிலீசுக்கு முன்பு ரஜினி தெரிவித்த கருத்து அப்பட வசூலை பாதித்தது போல, பேட்ட படத்திற்கு நிகழ்ந்து விட கூடாது என்பதற்காகவே ரஜினி மௌனம் காப்பதாக சொல்லாமல் சொல்லி இருக்கிறார் கஸ்தூரி.