Breaking News

விஸ்வாசத்தில் இணையும் வீரம்..? ரசிகர்களை குழப்பும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்


நடிகர் அஜித்; வீரம்,வேதாளம்,விவேகம், ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்த வருட பொங்கல் ஸ்பெசலாக வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.

அஜித் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பகுதி புகைப்படம் இன்று லீக் ஆகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியையும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

குறிப்பிட்ட புகைப்படத்தில் கூண்டிற்குள் நடிகர் அஜித் சண்டை போடுவது போன்ற காட்சி இடம் பெற்று உள்ளது. அதுவும் வீரம் படத்தில் தோன்றிய அதே லுக்கில் அஜித் தோன்றி இருக்கிறார்.

இதனால் வீரத்ததையும், விஸ்வாசத்தையும் இணைப்பது போன்ற கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகி இருக்கலாமோ என்ற பேச்சும் ரசிகர்களிடையே அடிபட ஆரம்பித்திருக்கிறது.