Tuesday, 18 September 2018

டால்பினை கொஞ்சியது ஒரு குத்தமா..? த்ரிஷாவை வாட்டி வதைக்கும் நெட்டிசன்கள்


த்ரிஷா திரையுலகில் கிட்டத்தட்ட 20 வருடங்கள் நிலைத்து, இதுவரை எந்த நாயகியாலும் செய்யமுடியாத ஒன்றை சத்தித்து காட்டிய நடிகை. என்னதான் இப்படியொரு சிறப்பம்சம் கொண்ட நாயகியாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் இவரை எதிர்மறை விமர்சனங்களால் வாட்டி வதைக்க ஒரு கூட்டமே இருக்கிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பீட்டா அமைப்பின் விளம்பர தூதராக இருந்த ஒரே காரணத்திற்காக படுமோசமான விமர்சனங்களை த்ரிஷா சந்தித்ததே அதற்கு ஆதாரம்.

இப்படி இருக்க சமீபத்தில் இவர் வெளியிட்டிருந்த புகைப்படம் ஒன்றும் இவருக்கு தலைவலியை தந்திருக்கிறது.

சூட்டிங் இல்லாத சமயங்களில் வெளிநாடுகளில் சுற்றி திரியும் திரிஷா, சாகச விளையாட்டுகளிலும் பல பொழுது போக்கு அம்சங்களிலும் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக கொண்டவர்.

இந்நிலையில் சமீபத்திய சுற்றுலாவின் போது டால்பினுடன் கொஞ்சி விளையாடிய திரிஷா, அந்த அழகிய தருணத்தை புகைப்படமாக அவரது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டார்.

இதனை பெரும்பாலான ரசிகர்கள் கண்டு ரசித்தாலும், 'டால்பின்கள் இருக்க வேண்டிய இடம் நீச்சல் குளம் அல்ல, ஒரு விலங்குகள் நல அமைப்பின் தூதராக இருந்து கொண்டு நீங்களே இவ்வாறு செய்யலாமா?' என எதிர்மறை கருத்துக்களை அள்ளி வீசி வருகின்றனர் ஒரு தரப்பினர்.

   
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();