Breaking News

அவரை பார்த்தாலே வியப்பாக உள்ளது..! நயனை புகழும் ஜோ


தமிழ் சினிமாவுக்கு கிடைத்த தலைசிறந்த நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த அவர் தற்பொழுது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள, திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் காற்றின் மொழி எனும் திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. இன்றும் இவரது நடிப்பை கண்டு வியக்கும் பல்வேறு நாயகிகள் இருக்கிறார்கள்.

இப்படிபட்ட பெயர் வாங்கிய நடிகை ஜோதிகா, தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாராவை புகழ்ந்து பேசி இருக்கிறார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாரா குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், 'எப்பொழுதும் கூடுதல் முயற்சி செய்து வெற்றி பெரும் அவரைப் பார்த்தால் வியப்பாக உள்ளது'.

'முன்னணி நாயகிகளாக நாங்கள், நாயகர்கள் செய்யும் காரியங்களை செய்ய முடியாது. இப்படி ஒரு கட்டுப்பாடான சூழ்நிலையில், நாயகிக்கு முக்கியதுவம் உள்ள கதைகளில் நடிப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. இன்று சினிமா துறையில் அவர் இந்த நிலையை அடைந்திருப்பது மிகப்பெரிய சாதனை.' என நயன்தாராவை  புகழ்ந்திருந்தார்.