Breaking News

ரஜினிக்கு அதிர்ச்சி அளித்த 2.0... ஏமாற்றினாரா இயக்குனர் சங்கர்..?


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் 2.0. பல நூறு கோடி பொருட்செலவில் பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகளோடு உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் நீண்ட தாமதத்திற்கு பிறகு வருகிற நவம்பர் 29ம் தேதி ரிலீசாக இருக்கிறது.

இதன் ட்ரைலரும் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் 2.0 திரைப்படத்தின் இறுதி வடிவத்தை முழுமையாக பார்வையிட்ட ரஜினிகாந்த் "நீங்கள் சொன்னதைப் போல இந்த திரைப்படம் இல்லையே" என இயக்குனர் சங்கரிடம் ஏமாற்றத்துடன் கூறியதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது ரஜினியின் திரைப்படங்களில் வில்லன்களை தட்டி கேட்டும் அவரை  மாஸ் ஹீரோ என்று ஏற்றுக் கொள்ளும் அளவில் வில்லன்கள் செய்யும்  அநீதிகள் அமைந்திருக்கும்.

ஆனால் 2.0 திரைப்படத்தினை பொறுத்தவரை, அழிந்து வரும் தன் இனத்திற்காக அதன் முழு காரணமான மனித இனத்தை ஒரு பறவை பழி வாங்குவதாகவும், ரஜினிகாந்த் அதனை முறியடிப்பது போலவும் கதைக்களம் அமைந்திருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு; வில்லன் அக்சய்குமார் தான் ஹீரோவாக தெரிய அதிக வாய்ப்பிருக்கிறது.

இதனால் வழக்கமான ரஜினியின் படங்களைப் போல, 2.0வில் அவரது கதாப்பாத்திரம் வலுவானதாக இருக்காது என்பதே ரஜினியின் இந்த ஏமாற்றத்திற்கு காரணம் என கிசு கிசுக்கபடுகிறது.