Breaking News

எவருமே எதிர்பார்க்காத பிரமாண்டத்தோடு வெளியாகும் 2.0 டீசர்..! இப்படி வருவேன்னு எதிர்பாக்கலல..!


#2.0-teaser-3d

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற வருடமே படப்பிடிப்புகள் முடிந்தாலும், ரிலீசில் பின்வாங்கி கொண்டே இருக்கும் திரைப்படம் 2.0.

சங்கர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தின் டீசரானது வருகிற செப்டம்பர் 13ம் தேதி வெளியிடப்படும் என தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுவும் இந்திய திரையுலகில் எவருமே செய்யாத விதத்தில், ஒரு புதிய முயற்சியாக 3Dல் டீசர் வெளியிடப்படுவதாக அறிவித்து இருக்கிறது அப்படக்குழு. 

முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசரும் 3Dல் வெளியாக இருக்கும் இந்த செய்தியானது, இதற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.

என்றாலும் இந்த 3D அனுபவத்தை பெற, அதற்கான பிரத்யேக கண்ணாடிகளை ரசிகர்கள் வாங்க வேண்டி இருக்கும். இந்நிலையில் அந்த கண்ணாடிகளை எங்கே வாங்குவது என்பது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரத்துக்கு விளம்பரமும் ஆச்சி...! வசூலை தாண்டி காசு பாத்த மாதிரியும் ஆச்சு..!