Tuesday, 28 August 2018

யோகிபாபுவுக்கு இப்படியொரு வரவேற்பா..? படக்குழுவினரையே வியக்க வைத்த சம்பவம்


எப்பொழுதும் இல்லாத அளவிற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் தற்பொழுது நாயக, நாயகிகளை தாண்டி பிற காதாப்பத்திர நடிகர்களையும் ரசிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார் காமெடி நடிகர் யோகிபாபு. கோலமாவு கோகிலா படத்திற்கு பின் நாயகர்களுக்கு நிகரான வரவேற்பு ரசிகர்களிடம் இவருக்கு கிடைத்துள்ளது.

இதனை நிரூபிக்கும் விதத்தில் இவர் கலந்து கொள்ளும் திரைப்பட ப்ரோமோசன், பத்திரிக்கையாளர் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகள் நாயகர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஆராவாரத்தை இவர் என்ட்ரி கொடுக்கும் போது ஏற்படுத்தி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவருகின்றனர் ரசிகர்கள்.

அவர் மைக்கின் முன்பு வந்து நின்றாலே கரம் கோசங்களால் அரங்கம் அதிருகிறது. இப்படி எப்பொழுதும் இல்லாத அளவிற்கு காமெடி நடிகருக்கு ரசிகரிடையே கிடைத்திருக்கும் வரவேற்பு அவரை ஒப்பந்தம் செய்துள்ள படக்குழுவினரையே வியக்க வைத்துள்ளதாம்.
Disqus Comments
'