Breaking News

பிற போட்டியாளர்களால் புறக்கணிக்கப்படும் யாஷிகா, ஐஸ்வர்யா... பதிலுக்கு அவர்கள் எடுத்த முடிவு


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்நிலையில் இந்த சீசனில் அதிக சர்ச்சைகளில் சிக்கி, பார்வையாளர்களிடம் வெறுப்பை சம்பாதித்த மகத் நேற்று வெளியேற்றப்பட்டு இருந்தார்.

இவரது வெளியேற்றமானது ஐஸ்வர்யா மற்றும் யாசிகாவை பெரிதும் பாதித்துள்ளது. பிறர் தங்களுக்கு எதிராக செயல்பட்டாலும் இந்த மூவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து வந்தனர்.

இப்பொழுது இந்த கூட்டணியானது இரண்டாக குறைந்துவிட்ட நிலையில், மக்கள் மற்றும் சக போட்டியாளர்களின் வெறுப்பிலிருந்து எப்படி தப்பிப்பது என்று செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது, ஐஸ்வர்யா, யாஷிகா இருவரும் தாங்கள் ஜெயிக்க வேண்டும் என்று எண்ணிய தங்களது நண்பர்களுக்காக சிறப்பாக விளையாடி ஒவ்வொரு டாஸ்கிலும்  சிறந்த போட்டியாளர் என்ற பெயரை பெரும் முயற்சியில் இறங்கி இருக்கின்றனர்.

இது குறித்த காட்சிகள் சமீபத்திய ப்ரோமோவில் இடம் பெற்றிருந்த நிலையில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் மேலும் சூடு பிடிக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.