Sunday, 12 August 2018

மகன் ஏற்படுத்திய சாலை விபத்து..! விக்ரம் தரப்பு அளித்த விளக்கம்


நடிகர் விக்ரமின் மகனும் இளம் நடிகருமான துருவ் ஏற்படுத்திய சாலை விபத்து  தமிழகத்தில் இன்று பரபரப்பாக பேசப்படும் செய்தியாக வலம்வருகிறது.

சென்னை தேனாம்பேட்டையில் நிகழ்ந்த குறிப்பிட்ட விபத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுனர் காயம், மூன்று ஆட்டோக்களும் சேதமடைந்ததை தொடர்ந்து, துருவ் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

விபத்திற்கு அவர்கள் குடித்து விட்டு வாகனம் ஒட்டியது காரணமாக கூறப்பட்டு வந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து விக்ரமின் தரப்பு பதில் அளித்துள்ளது.

இது குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள விக்ரம் ரசிகர் மன்ற தலைவர், சூரிய நாராயணன் அவர்கள்; 'இந்த விபத்திற்கு கவன குறைவு மட்டுமே காரணம்' என அதில் குறிப்பிட்டு இருந்தார்.



Disqus Comments
'