Breaking News

குடிபோதையில் வாகனம் ஒட்டிய விக்ரம் மகன்..! ஆட்டோ மீது மோதியதால் விபரீதம்


பிரபல முன்னணி தமிழ் நடிகர் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதில் சாலை விபத்தில் சிக்கியிருக்கிறார்.

சினிமா நடிகர், நடிகைகள் போதையில் வாகனங்களை இயக்கி விபத்துகளில் சிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் விக்ரமின் மகனான துருவ் ஓட்டிவந்த வாகனம், சென்னை தேனாம்பேட்டையில் சாலையின் ஓரம் நின்ற மூன்று ஆட்டோக்களின் மீது மோதியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திஇருக்கிறது. இந்த விபத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுனர் படுகாயம் அடைந்துள்ளார்.


சம்பவத்தின் போது துருவ் குடித்திருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். துருவோடு அவரது நண்பர்களும் அந்த காரில் பயணித்ததாகவும், விபத்து ஏற்பட்ட பின் அவர்கள் தப்பியோடிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

முன்னதாக நடிகர் ஜெய் இதேபோல சில மாதங்களுக்கு முன் போதையில் வாகனம் ஓட்டி சாலை விபத்தில் சிக்கியிருந்தார். இதனை தொடர்ந்து அவரது ஓட்டுனர் உரிமமும் பறிக்கப்பட்திருந்தும் குறிப்பிடத்தக்கது.