Breaking News

கேரள மக்களுக்காக பெரும் தொகையை வழங்கிய விக்ரம்


கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட 300 அப்பாவி பொது மக்கள் உயிரிழந்துள்ள கொடூரமான சம்பவங்களும் நிகழ்ந்தேறியுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் தங்களது உடைமைகளை இழந்து தவித்து வரும் நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவும் கேரள மக்களுக்காக உதவி கரம் நீட்டியுள்ளது.

இந்தியா முழுவதிலும் இருந்து பணம் மற்றும் அத்தியாவசிய பொருட்களாக உதவிகள் கேரள மக்களை சென்றடைந்து வருகிறது. சினிமா பிரபலங்களும் பெரிய தொகையினை நிவாரண நிதியாக வழங்கி வரும் நிலையில், நடிகர் விக்ரமும் சமீபத்தில் ரூபாய் முப்பத்தைந்து லட்சத்தை கேரள முதல்வரின் நிவாரண நிதி கணக்கிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.