Thursday, 16 August 2018

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இயக்கும் விஜய் பட இயக்குனர்


தமிழக முன்னால் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதா அவர்களது வாழ்க்கை வரலாறு படமாக இருக்கும் தகவல்கள் வெளிவந்திருந்த நிலையில், முதன் முறையாக அதன் இயக்குனர் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள், தமிழகத்தில் அசைக்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக விளங்கியவர். இந்திய அரசியலில் சக்தி வாய்ந்த பெண்மணியாகவும் வலம்வந்த அவர் திடீர் உடல் நிலை பாதிப்பின் காரணமாக மர்மமான முறையில் மரணமடைந்தார்.

சினிமா உலகில் தற்பொழுது வாழ்க்கை வரலாற்று படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்று வருவதை ஒட்டி, பெண்களுக்கெதிரான ஆண்களின் ஆதிக்கம் அதிகம் இருந்த கால கட்டத்திலேயே சாதித்து காட்டிய பெண்மணியான ஜெயலலிதா அவர்களது வாழ்க்கையையும் படமாக்க பல தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வந்தன.

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனமான விப்ரி மீடியா, ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க இருப்பது குறித்த அதிகாரப்பூரவமான தகவல்கள் வெளிவந்துள்ளது.


மேலும் இந்த படத்தை இயக்க இருப்பது நடிகர் விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கிய ஏ.எல். விஜய் என்பதும் இத்திரைப்படம் குறித்த எதிரபார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();