Breaking News

ஆசிய விளையாட்டு போட்டியை அதிர வைத்த தளபதி விஜயின் பாடல்


18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது இந்தோனேசியாவின் ஜகேர்டா மற்றும் பலேம்பங் நகரங்களில் நடைபெற்று வருகிறது. 3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என பதக்கபட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது இந்தியா.

பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் இந்நிலையில், தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது ஒரு நிகழ்வு.

கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற்ற மகளிர் கபடி போட்டியின் போது, பின்னணியில், நடிகர் விஜய் கபடி வீரராக நடித்த, கில்லி திரைப்படத்தின் 'கபடி கபடி' எனும் தீம் இசை ஒலித்தது.

உலகளாவிய ஒரு போட்டியில் தமிழ் சினிமாவை சேர்ந்த, அதுவும் நடிகர் விஜயின் பட பாடல் ஒலித்தது தமிழ் சினிமா ரசிகர்களை, குறிப்பாக நடிகர் விஜயின் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.