Breaking News

விநாயகர் சதுர்த்தி அன்று விஜய் - அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கம் சர்ப்ரைஸ்


வருகிற விநாயகர் சதுர்த்தி அன்று, விஜயின் சர்கார் பட டிரைலரும், அஜித்தின் விஸ்வாசம் பட பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாக இருக்கிறது.

மெர்சல், விவேகம் திரைப்படங்களை அடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித்; சர்கார், விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.

தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த இந்த திரைப்படங்களில் விஸ்வாசம் ரிலீசானது படப்பிடிப்பு தாமதமாக துவங்கிய  காரணத்தினால் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்கார் தீபாவளிக்கு வருவது உறுதி எனும் நிலையில் அதன் டிரைலரை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

அதே தேதியில் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாக இருக்கும் நிலையில், விநாயகர் சதுர்த்தியானது தல மற்றும் தளபதி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு நாளாக மாறி இருக்கிறது.