Tuesday, 28 August 2018

ஹேர் ஸ்டைலை மாற்றினால் லைஃபும் மாறும்... திரிஷாவின் புதுமையான விளக்கம்


தமிழ் திரையுலகில் ஒரு நாயகி இத்தனை ஆண்டுகள் முன்னணி நாயகியாக நிலைக்க முடியுமா என பலரையும் வியக்க வைத்தவர் நடிகை திரிஷா.

இவருக்கு திரையுலகில் நிறைவேறாமல் இருந்த ஒரே ஆசை என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்காமல் இருந்தது. அந்த ஆசையும் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படத்தில் நிறைவேறியுள்ளது.

சிம்ரன், மேகா ஆகாஸ் போன்ற பிற நாயகிகளும் இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் ரஜினிக்கு ஜோடியாக இருப்பது யார் என்பது இன்னும் ரகசியமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்திற்காக நடிகை திரிஷா  புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறி இருக்கிறார். தனது இந்த புதிய தோற்றத்தினை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த திரிஷா, 'ஒரு பெண் தனது தலைமுடியை கத்தரித்தால் அவள் வாழ்வில் மாற்றம் நடக்கும்' எனவும் குறிப்பிட்டு தானும் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருப்பதை சொல்லாமல் சொல்லி இருந்தார்.
  
Disqus Comments
'