Monday, 20 August 2018

ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் திரைப்படத்தை கைப்பற்றிய சன் டிவி


சண்ட கோழி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் நிலையில், அதன் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றி இருக்கிறது சன் டிவி நிறுவனம்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சண்டகோழி. இதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கும் செய்தி வெளியானது முதல், இந்த திரைப்படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் எகிற துவங்கியுள்ளது.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், சண்டகோழி முதல் பாகத்தின் சேட்டிலைட் உரிமையை பெற்ற சன் டிவி நிறுவனமே அதன் இரண்டாம் பாக உரிமத்தையும் போட்டியின்றி பெற்றுகிறது. 
Disqus Comments
'