Monday, 13 August 2018

'அஜித்' வழியில் ரசிகர்களுக்கு 'சிம்பு' கொடுக்கும் இன்ப அதிர்ச்சி


சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகர் சிம்பு. திரையுலகில் சிம்புவின் மீது எக்கச்சக்க குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்த நிலையில், அக்குற்றசாடுகளை மீண்டும் சொல்ல முடியாத அளவிற்கு முற்றிலும் புதிய ஒருவராக மாறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருவது, சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது என இவரது சமீபத்திய நடவடிக்கைகள் திரையுலகினரை மட்டுமல்லாது ரசிகர்களையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இவரது நடிப்பில் செக்க சிவந்த வானம் திரைப்படமும் உருவாகியிருக்கும் நிலையில், அடுத்ததாக வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்தது.

அதுவும் அஜித் நடிப்பில் வெளியான 'மங்காத்தா' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எனவும் கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்தது வெங்கட் பிரபு தரப்பு.

இந்நிலையில் சமீபத்திய தகவலின் படி, அந்த திரைப்படத்தில்  சிம்பு முற்றிலும் எதிர்மறையான கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல் நடிகர் அஜித் எதிர்மறையான கதாப்பதிரத்தில் நடித்த மங்காத்தா திரைப்படம் ரசிகர்ளிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அவரை போலவே, முதன் முதலாக சிம்புவும் எதிர்மறையான கதாப்பதிரத்தில் நடிக்க இருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு, இன்ப அதிர்ச்சிதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();