Breaking News

வருகிறது 'சில்க் ஸ்மிதா' வெப் சீரிஸ் - இயக்க இருக்கும் ரஜினி பட இயக்குனர்


இந்த இன்டர்நெட் யுகத்தில் சினிமா துறையில், வெப் சீரிஸ்கள் (இணைய தொடர்கள்) வரவு அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனை மார்கெட் போன நடிக, நடிகைகளுக்கு சின்னத்திரைக்கு மாறுதலாக கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்றும் கூறலாம்.

முன்னணியில் இருக்கும் ஒரு சிலரும் வெப் சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். திகில், காமெடி, காதல் எனும் ஜானர்களில் இளசுகள் விரும்பி பார்க்கும் இந்த வெப்சீரிஸ்களில், பிரபலங்களில் வாழ்க்கை வரலாறும் இடம் பெற துவங்கியுள்ளது.

சில மாதங்களுக்கு முன், முன்னால் ஆபாச பட நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு குறித்த தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் 80-90 களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம்வந்து மர்மமான முறையில் மரணமடைந்து நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறும் வெப் சீரிஸாக வெளிவர இருக்கிறது.

மேலும் மற்றொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இதனை இயக்க இருப்பது, ரஜினியின் கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய பா. ரஞ்சித் என்பதுதான்.