Breaking News

மீண்டும் நடிகனாகும் சீமான்..! அப்போ அந்த அரசியல்...?


தமிழ் சினிமாவில் இயக்குனராக பிரபலமாகி ஒரு சில திரைப்படங்களில் நடித்தும் அசத்தி இருப்பவர் சீமான். அரசியல் ஈடுபாடு காரணமாக திரைத்துறையில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்த இவர் மீண்டும் நடிக்க இருக்கிறார்.

ஆசிஃப் பில்ம் இண்டர்நேசனல் நிறுவனம் தயாரிக்க இருக்கும் தவம் எனும் திரைப்படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சீமான்.

அந்த படத்தின் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ள நிலையில், மக்கள் பிரச்சனைகளை பேசும் ஒரு திரைப்படமாக தவம் இருக்கும் என பேசப்பட்டு வருகிறது.