Thursday, 30 August 2018

அஜித் - விஜய்க்கு இணையாக முன்னேறிய சிவகார்த்திகேயன்; ரசிகர்கள் கொண்டாடும் சாதனை


தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா ஆகிய நடிகர்கள்தான் வசூல் ஜாம்பவான்கள். இவர்களது படங்கள் வெளிநாட்டு ரசிகர்களினாலும் விரும்பி பார்க்கப்படுகின்றன.

இந்நிலையில் மிக மிக குறுகிய காலத்தில் பல அனுபவ நடிகர்களுக்கும் கிடைக்காத இந்த இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். 

இவரது நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள சீம ராஜா திரைப்படம், ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா ஆகியவர்களின் படங்களை தொடர்ந்து முதன் முறையாக போலந்த் நாட்டில் ரிலீசாக இருக்கிறது.

இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் தற்சமயம் வெளியாகி இருக்கும் நிலையில், சிவகார்த்திகேயனின் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.




Disqus Comments
'