Breaking News

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உடன் நடிக்கும் சாயிஷா


தமிழ் சினிமாவில் தற்பொழுது அடுத்தடுத்த படவாய்ப்புகளை பெற்று மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகை சாயிஷா சைகல். இவரது நடிப்பில் கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், ஜுங்கா என வெளிவந்திருந்த நிலையில், பிரபு தேவாவின் கருப்பு ராஜா வெள்ளை ராஜா எனும் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார்.

அது மட்டுமல்லாது பிரபுதேவா ஸ்டூடியோஸ் தயாரிக்கும் கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு எனும் அனிமேஷன் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம் இவர்.

மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அனிமேஷன் வடிவில் தோன்றும் இந்த திரைப்படத்தில் தானும் ஒரு பகுதியாகி இருப்பதை எண்ணி சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறாராம் சாயிஷா.