Breaking News

முன்னணியில் இருந்தும் தில்லாக சமந்தா எடுத்த முடிவு


தமிழ், தெலுங்கு திரையுலகில் திருமணத்திற்கு பின்னும் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார் நடிகை சமந்தா. சொல்லப்போனால் திருமணத்திற்கு பின்புதான் அவரது படங்கள் வெற்றிக்கு மேல் வெற்றியை குவித்து வருகின்றன.

இதனால் அவரது மார்கெட் மவுசு அதிகரித்திருக்கும் நிலையில், அவர் நடிக்க இருக்கும் கதாப்பாத்திரம் நட்பு வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றதாம்.

இது குறித்த தகவலை நடிகை சமந்தாவே சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார். அதன் படி பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர், நந்தினி ரெட்டி இயக்க இருக்கும் திரைப்படம் ஒன்றில் 70 வயது பாட்டியாக அவர் நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது.

அதுவும் தென்கொரிய மொழியில் வெளியாகி மெகா ஹிட் அடித்த காமெடி திரைப்படம் 'மிஸ் கிரானி'யின் ரீமேக் தான் அந்த திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 70 வயது பாட்டி ஒருவர் மாயாஜாலம் நிகழ்ந்தது போல 50 வயது இளமையாகி, அதன் பின் அவர் செய்யும் அலப்பறைகள் தான் இந்த திரைப்படத்தின் கதை.


இதனால், வயதான பெண்ணாக சமந்தா நடிக்க இருப்பது குறித்து நட்பு வட்டாரங்கள் கேள்வி எழுப்பினாலும், 'கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது' எனும் முடிவில் அவர் விடாப்பிடியாக இருப்பதாக தெரிவிக்கின்றன சினிமா வட்டாரங்கள். தமிழ் சினிமாவுக்கு ஒரு உலக நாயகி வந்தாச்சு..!