Breaking News

நாயகியின் வாழ்வில் வில்லனான சூப்பர் ஸ்டார் நடிகர்


நடிக, நடிகைகளுக்குள்ளான கருத்து வேறுபாடுகள் அவரவர் படவாய்ப்புகளுக்கான சிக்கலாக முடிந்து விடுகின்றது. இப்படியொரு சூழ்நிலையில் நடிகை ரம்யா நம்பீசன், நடிகர் மோகன்லால் மீது மறைமுக குற்றச்சாட்டு ஒன்றினை வைத்திருக்கிறார்.

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருப்பவர் நடிகர் மோகன் லால். கேரளா திரையுலகின் நடிகர் சங்க தலைவராகவும் விளங்கி வரும் இவர், நடிகை பாவனா கடத்தல் வழக்கில் தொடர்புடைய நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்க உறுப்பினர் ஆக்கியதை தொடர்ந்து, நடிகைகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அதிலும் நடிகை ரம்யா நம்பீசன் தனது நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததுடன், மோகன் லாலுக்கு எதிராக கருத்தும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் கேரளாவில் நடந்த வழக்கறிஞர்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ரம்யா நம்பீசன், 'நடிகர் சங்க பிரச்சனையால், தான் படப்பிடிப்பில் தொல்லை தருவதாக சம்பந்தப்பட்டவர்கள் வதந்தி கிளப்பி வருவதாகவும், இதனால் இயக்குனர்கள்-தயாரிப்பாளர்கள் தன்னை நடிக்க வைக்க தயங்குவதாகவும் கூறி, மறைமுகமாக நடிகர் மோகன்லால் அவர்களை தாக்கி பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.