Breaking News

அமெரிக்க காதலருடன் ரகசிய திருமணம்...? மோதிரத்தால் மாட்டிக்கொண்ட பிரியங்கா சோப்ரா


பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவுக்கு, அவரது அமெரிக்க காதலரான நிக் ஜோனாஸ் என்பவருடன் ரகசிய திருமணம் முடிந்து விட்டதாக ஒரு செய்தி உலாவி வருகிறது.

பிரியங்கா சோப்ரா தற்பொழுது ஹாலிவுட்டிலும் கலக்கி வரும் நிலையில், அமெரிக்க பாடகரான நிக்ஜோனாஸ் என்பவரோடு காதலில் விழுந்ததாக பேசப்பட்டு வந்தது.

பொது இடங்களிலும், விழாக்களிலும் இவர்கள் ஜோடியாக சுற்றி திரிந்தது இதனை உறுதி படுத்தி இருந்த நிலையில், தற்பொழுது இருவரும் திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதற்கு சான்றாக வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் சுற்றி திரிகிறது.


குறிப்பிட்ட வீடியோவில், விமான நிலையத்தில் தென்பட்ட நடிகை பிரியங்கா சோப்ரா பத்திரிக்கையாளர்களை பார்த்ததும் தனது கையில் இருந்த மோதிரம் ஒன்றினை ஒழித்து வைக்கிறார். இவரது இந்த அசாதாரண நடவடிக்கை ரகசிய திருமண சந்தேகத்தை ரசிகர்களிடம் கிளப்பி இருக்கிறது.

முன்னதாக அமெரிக்க நிகழ்ச்சி ஒன்றில், தான் நிக்ஜோனாசை திருமணம் செய்து கொள்வதாக இருந்தால், என் கையில் கண்டிப்பாக மோதிரத்தை பார்ப்பீர்கள்' என குறிப்பிட்டு இருந்ததும் இந்த திருமண செய்தியை உறுதி படுத்துவதாக இருக்கிறது.