Breaking News

கணவராலேயே வீடு புகுந்து சுட்டு கொல்லப்பட்ட நடிகை! பாகிஸ்தானில் பயங்கரம்


பிரபல பாகிஸ்தான் திரையுலக பாடகி மற்றும் நடிகையான ரேஷ்மா அவரது கணவராலேயே சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர் தீவிரவாதம் மற்றும் வன்முறை நடவடிக்கைகளால் தீவிரவாத நாடு என்ற பெயரை உலக நாடுகளிடையே பெற்றுள்ளது பாகிஸ்தான். இங்கு திரையுலக பிரபல பெண்களுக்கெதிராக நடக்கும் குற்றங்களும் அதிகம்.

கடந்த ஜனவரி மாதம் தான் அங்கு மேடை பாடகி ஒருவர் தனியார் நிகழ்ச்சியில் பாட மறுத்தால் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லபட்டார். தொடர்ந்து மற்றொரு மேடை பாடகி ஒருவரும், அமர்ந்திருந்து பாடிய காரணத்தால் நிகழ்ச்சியின் போதே கொடூரமான கொலை செய்யப்பட்டு இருந்தார்.

இந்த சம்பவங்கள் ஏற்படுத்திய தாக்கமே இன்னும் குறையாத நிலையில், நடிகை ரேஷ்மா குடும்ப பிரச்சனை காரணமாக சொந்த கணவராலேயே சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.