Breaking News

கேரள மக்களுக்கு உதவி கரம் நீட்டிய நயன்தாரா


கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தின் காரணமாக எக்கச்சக மக்கள் தங்களது வீடு, உடைமைகளை இழந்து உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர்.

அவர்களுக்கு உதவும் பொருட்டு இந்தியா முழுவதிலும் இருந்து உதவி தொகையும், அத்தியாவசிய பொருட்களும் பாமர மக்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரால் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக நம் தமிழகத்தில் இருந்து ஏராளமான உதவிகள் கேரள மக்களுக்காக செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழ் சினிமா சார்பாக விசால் போன்ற நடிகர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களை தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் ரூபாய் பத்து லட்சத்தை 'முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதி'யாக வழங்கி இருக்கிறார். இது குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் நயன்தாரா பதிவிட்டிருந்த நிலையில், தனது ரசிகர்களையும் தங்களால் முடிந்த தொகையை வழங்கி உதவுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.