Breaking News

தொடருது புயல் நடிகரின் காதல் வேட்டை... கடைசியில் இந்த நடிகை சிக்கிட்டாரே?


நடனத்திற்கு பெயர்போன தென்னிந்திய நடிகர் ஒருவரின் காதல் லீலைகள் நின்ற பாடில்லை. 'நடனத்தில் இவரை அடித்துக்கொள்ள இந்தியாவிலேயே ஆள் இல்லை' என்று சொல்லும் அளவிற்கு புகழ் பெற்ற இவரது நடனம் போலவே, இளம் நடிகைகளுடன் தொடர்ந்து வெளியாகும் இவரது காதல் கிசு கிசுக்களும் பிரபலமாகி வருகிறது.

முன்னதாக சூப்பர் ஸ்டார் நாயகியை காதலித்து திருமணம் வரை சென்று பிரிந்தார். தொடந்து பாலிவுட் நாயகிகளுடன் கிசு கிசு செய்திகள் வெளிவந்த நிலையில், சில ஆண்டுகளாக நல்ல பிள்ளையாக தனது வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு வதந்திகளில் சிக்காமல் இருந்து வந்தார்.

ஆனால் தற்பொழுது, வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக இளம் தமிழ் நடிகை ஒருவருடன் காதல் கிசு கிசுவில் சிக்கி இருக்கிறார். இவரது வயதில் பாதி வயதே ஆன குறிப்பிட்ட நடிகை, மின்னல் வேகத்தில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருபவர்.

தற்பொழுது புயல் நடிகருடன் இந்த இளம் நடிகை ஒரு திரைப்படத்தில்  நடித்து வரும் நிலையில்,  நடனத்தின் மீதான இவர்களது காதல் இருவரையும் காதலில் வீழ்த்தியதாக சொல்லபடுகிறது.

சமீபத்தில் நடிகை தடபுடலாக தனது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். அதில் பிற நடிக நடிகைகளோடு கலந்து கொண்ட புயல் நடிகர், பிறர் விடை பெற்று சென்ற பின்னரும் இறுதிவரை நடிகையோடு இருந்து விழாவை சிறப்பித்தும் இருக்கிறார்.

பல்லு இருக்கிறவன் பக்கோடா என்ன.., பாரங்கல்லையே தின்னலாம்..!