Breaking News

வெங்கட்பிரபு என்னை ஏமாற்றிவிட்டார்..! புலம்பும் மனிஷா யாதவ்


வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மனிசா யாதவ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஒரு குப்பை கதை திரைப்படம் ரசிகர்களை இவரது நடிப்பு குறித்து பாராட்ட வைத்துள்ளது.

இதனால் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் மனிஷா, சில வருடங்களாக தனக்கு சரியான படங்கள் அமையாதது குறித்து சமீபத்தில் பேசி இருந்தார்.

அப்பொழுது சென்னை-28  படத்தின் இரண்டாம் பாகத்தில் கவர்ச்சி நடனம் ஆடியிருந்ததுதான், சினிமா துறையில் தான் செய்த தவறு எனவும், ஆரம்பத்தில் அந்த திரைப்படத்தில் நல்ல வேடம் தருவதாக அழைத்து இயக்குனர் வெங்கட்பிரபு, இறுதியில் ஐட்டம் சாங்கிற்கு ஆட வைத்துவிட்டார் என்றும் புலம்பி இருந்தார்.

மேலும் 'இந்த அனுபவம் தனக்கு கிடைத்த பாடம். இனிமேல் கவர்ச்சி நடனங்கள் ஆடப்போவதில்லை' என்ற தனது புதிய முடிவு குறித்தும் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.